×

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 40,000 பேர் பதிவு

மக்களவையில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏறத்தாழ 40ஆயிரம் நோயாளிகள் பதிவு செய்தனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 13,430 பேர் பதிவு செய்தனர். கடந்த ஆண்டில் மட்டும் 11,705 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது. 3,290 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சைகாக 2048 பேர் பதிவு செய்து பட்டியலில் காத்திருக்கின்றனர். ஆனால் 243 இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

200 ஊட்டச்சத்து மருந்து தரமற்றது: ஊட்டச்சத்து மருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததில் 200 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரவு பாதுகாப்புக்கு நடவடிக்கை: ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம், இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவுடன்(சிஇஆர்டி) இணைந்து தரவு பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து நோயாளிகளின் தனியுரிமையை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

The post சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 40,000 பேர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Union Health Minister ,Mansukh Mandaviya ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...